சமஸ்தான வரலாறு தோல்பூர் சமஸ்தானம் | Samasthana History Dholpur Samasthan in tamil

சமஸ்தான வரலாறு          தோல்பூர் சமஸ்தானம்..!

Samasthana History  Dholpur Samasthan in tamil..!

Mr.Old lndia,

Mr.Old lndia,

தோல்பூர் சமஸ்தானம்:

★ தோல்பூர் சமஸ்தானம் அல்லது தோல்பூர் இராச்சியம் (Dhaulpur State or Kingdom of Dholpur) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் 3038 சதுர மைல் பரப்பளவும், கொண்டிருந்தது.

★  தோல்பூர் இராச்சியத்தை 1806-இல் நிறுவியவர் ஜாட் இன மன்னர் கிராத் சிங் ஆவார்.

★ 1817 வரை முடியாட்சியாக விளங்கிய தோல்பூர் இராச்சியம் 1818-இல் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. 

★ இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

★  இந்திய விடுதலையின் போது 1947 முதல் 1949 வரை இந்த சமஸ்தானம் அரசியல்சட்ட முடியாட்சியாக இருந்தது. 

★ பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று தோல்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


தோல்பூர் அரசு :

தோல்பூர்பூர் இராச்சியம்

சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

தலைநகரம் : தோல்பூர்

அரசு : முடியாட்சி (1806–1818)

சமஸ்தானம் : (1818–1947)

அரசியல்சட்ட முடியாட்சி (1947–1949)

மகாராஜா இராணா

 • 1806–1835

கிராத் சிங் (முதல்)

 • 1911–1949

உதயபானு சிங் (இறுதி)

வரலாறு

நிறுவப்பட்டது : 1806

 பரப்பு ; 1901ல்3,038 சதுர மைல் km2 

Population : 1901ல் 250,000 


தற்காலத்தில் அங்கம் :

இராஜஸ்தான், இந்தியா

Mr.Old lndia,

1870  -  இல் தோல்பூர் மன்னர் பகவந் சிங்

★ தோல்பூர் கேசர்பாக் அரண்மனை, தற்போது தோல்பூர் இராணுவப் பொதுப் பள்ளியாக உள்ளது.


வரலாறு :

★ 15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் மட்டும் 565 சமஸ்தானங்கள் (Princely state) இருந்தது.

★ இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. 

★ இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், 1949ஆம் ஆண்டுக்குள், சிக்கிம் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி அரசுகள் (சுதேச சமஸ்தானங்கள்) இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ அல்லது வேறொரு நாட்டுடனோ இணைந்தன. 

★ சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்: இவற்றில் மைசூர் அரசு, ஐதராபாத் நிசாம், பரோடா அரசு, திருவாங்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டுமே பெரிய நிலப்பகுதிகள் கொண்டதாகும். 

★ இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரும்பாலன சுதேச சமஸ்தானங்கள் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று விடுதலை இந்தியாவுடன் இணைந்து விட்டன. 

★ ஐதராபாத் மற்றும் ஜுனாகத் அரசு போன்ற சமஸ்தானங்களுக்கு எதிராக போரிட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

★  முன்னதாக ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இராச்சியம் செப்டம்பர் 1947-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

திருவிதாங்கூர் இராச்சியம் | Kingdom of Travancore in tamil

ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர் வரலாறு | History of Travancore under Robert Clive in tamil,

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மன் | King Marthandavarman of Travancore in tamil